முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-ரஷ்யா உறவுகளை மேம்படுத்த பிரதமர் மோடி ரஷ்ய ஜனாதிபதி புடின் உறுதி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

 தாஷ்கண்ட்  -  இந்தியா-ரஷ்யா உறவுகளை மேம்படுத்த இந்திய பிரதமர் மோடி ,ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதி மேற்கொண்டனர். இந்திய பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். 2நாள் பயணமாக சென்றுள்ள அவர் ஷாங்காய் மாநாட்டின் இடையே ரஷ்ய ஜனாபதி விளாடிமிர் புடின் , பெலாரஸ் ஜனாதிபதி ஆகியோரயும் சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பின் போது புடினுடன் நடத்திய பேச்ச வார்த்தையின் போது  மோடிஇரு தரப்பு விவகாரங்கள், பரஸ்பர நலன்கள் விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

இரு நாட்டு தலைவர்களும் மக்கள் அணு சக்தி, எரி வாயு, பெட்ரோ கெமிக்கல் துறையில் கூட்டு ,விண்வெளி துறையில் தற்போது உள்ள உறவை மேம்படுத்ததுவது குறித்து விவாதித்தார்கள். வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்தும் இரு தலைவர்கள் விவாதித்தார்கள் என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் சுவரூப் தெரிவித்தார். இந்த பேச்சு வார்த்தையின் போது பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா தலைமைத்துவம் வகிப்பதை ரஷ்யா எதிர்நோக்கியுள்ளது.. ரஷ்யாவின் சிறப்பு கூட்டாளியாக இந்தியா உள்ளது. எஸ்.சி.ஓ அமைப்பில் இந்தியா உறுப்பினராவதை நாங்கள் வரவேற்கிறோம்  என்று புடின் தெரிவித்தார்.  

பிரேசில், ரஷ்யா,  இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் நாடுகளாக உள்ளன. இந்த 5நாடுகளில் உலகின் மொத்த மக்கள் தொகையில் 42சதவீதத்தினர் உள்ளனர். இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1600லட்சம் கோடி டாலராகவும் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா தலைமை பொறுப்பில் இருந்தது. தற்போது அந்த பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ,இந்தியா-ரஷ்யா நாடுகளின் தலைவர்கள் கலாச்சார உறவுகளை மேம்படுத்தவும் இரு நாடுகளின் தலைவர்கள் உறுதி மேற்கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்