முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவியரசு கண்ணதாசனின் 90-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, கவியரசு கண்ணதாசனின் 90-வது பிறந்தநாளை யொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கவியரசு கண்ணதாசனின் 90-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, சென்னை தியாகராயநகர், கோபதி நாராயணா சாலையில் உள்ள கண்ணதாசனின்  சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பென்ஜமின், மேயர் சைதை துரைசாமி தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தித்துறை இயக்குனர் குமரகுருபரன் மற்றும் கூடுதல் இயக்குனர் எழில் அழகன் ஆகியோர் பங்கேற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்