முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் பிடிப்போம்: காவல்துறை டி.ஐ.ஜி உறுதி

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கண்ணெதிரே ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என ரயில்வே காவல்துறை டி.ஐ.ஜி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி கொலை செய்யப்பட்ட இடத்தை டி.ஐ.ஜி பாஸ்கர் நேற்று (சனிக்கிழமை) மீண்டும் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில்,

"இந்த கொலை குறித்து விசாரிப்பதற்கு ரயில்வே காவல்துறை எஸ்.பி. விஜயகுமார், எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்தக் குழு சுவாதியின் பணியிடம், தோழிகள், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர் பயணித்த ஆட்டோ டிரைவர் மற்றும் கால்டாக்சி டிரைவர்களிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான சந்தேக நபரைத் தேடி வருகிறோம்.

கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார்.  அவர் மேலும் கூறும்போது, "இந்த கொலையை செய்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவராகவும் இருக்கக்கூடும். ரயில் நிலையத்தில் சுவாதியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வெட்டிவிட்டு ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் உதவிக்கு வரும்முன் தப்பி சென்றிருக்கிறார். எனவே அந்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவனாக இருக்கலாம். இந்த கொலை குறித்து பொதுமக்கள் தகவல் ஏதும் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்" என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்