முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் அத்துமீறல்

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

தேனி  - முல்லை பெரியாறு அணையில் கேரள மாநில நீர்பாசனத் துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து அணையின் நீர்மட்டம், நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் அணை பலம் இழந்துள்ளது, நீர் மட்டத்தை உயர்த்தக்கூடாது என அம்மாநில அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும் என்றும் கூறி வருகின்றனர். இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே கேரள வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அடூர் பிரகாஷ், பீர்மேடு தொகுதி எம்எல்ஏ பிஜுமோள் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அணைப்பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அத்துமீறி நுழைந்தனர்.  இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை அணையின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  இந்நிலையில், கேரள நீர் பாசனத் துறை செயற் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் தலைமையில் அதிகாரிகள் வல்லக்கடவு வழி யாக அனுமதி இன்றி முல்லை பெரியாறு அணையில் நேற்று முன்தினம் அத்துமீறி நுழைந்தனர். அணையின் நீர்மட்டம், நீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்து குறிப்பெடுத்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago