முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனா போரா கொலை வழக்கில் சி.பி.ஐக்கு கோர்ட்டு புதிய உத்தரவு

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

மும்பை  - சாட்சியின் ஒப்புதல் வாக்குமூல நகலைப் பெறவதற்கு குற்றம்சாட்டப்பட்டவருக்கு உரிமை உள்ளது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஷீனா போரா கொலைவழக்கில் இந்திராணி முகர்ஜியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அப்ரூவராக மாறிய டிரைவர் ஷ்யாம்வர் ரவியின் ஒப்புதல் வாக்குமூல நகலை அவர் கோரியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, “விசாரணையின்போது சாட்சியமாகப் பயன்படும் என்பதால், சக குற்றம்சாட்டப்பட்ட நபர் அல்லது சாட்சியின் ஒப்புதல் வாக்குமூல நகலைப் பெறவதற்கு குற்றம்சாட்டப்பட்டவருக்கு உரிமை உள்ளது” எனத் தெரிவித்தார். அப்போது சிபிஐ தரப்பில், விசாரணை நடந்து வருவ தால், தற்போது தர முடியாது, பின்னர் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் நீதிபதி, விசாரணை நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்கு மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அது அரசுதரப்பு ஆவணமாகக் கருதப்பட்டு, அதனை அளித்தாக வேண்டும் எனத் தெரிவித்தார்.  மேலும், சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்