முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 8சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி : 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டார்கள்

சனிக்கிழமை, 25 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

ஶ்ரீநகர்  - ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியில் சென்ற சி.ஆர்.பி.எப் வீரர்கள் பஸ்மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில்  8சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.  ரோந்து வீரர்கள் அதிக அளவில் கொல்லப்பட்ட நிகழ்வு அந்த மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதுடன் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையொட்டி பாகிஸ்தான் எல்லை உள்ளது. இதனால் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து தீவிரவாதிகள் நள்ளிரவில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த தீவிரவாதிகளை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் இரவும் பகலும் பாராமல் போராடி வருகிறார்கள். எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவதற்கு பாகிஸ்தான் எல்லை பகுதி வீரர்கள் உதவி வருகிறார்கள். தீவிரவாதிகள் ஊடுருவும் போது, பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு இந்திய வீரர்களை திசை திருப்புகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் சுலபமாக ஜம்மு காஷ்மீர்ல் நுழைய முடிகிறது. இருப்பினும் இந்திய வீரர்களின் தீவிர கண்காணிப்பால் பாகிஸ்தான் எல்லையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

 ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தும் ராணு வீரர்கள் உயிரிழப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்  தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஶ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எப். படையினர் ரோந்து பணிக்காக பஸ்சில் நேற்று சென்றார்கள். மதியம் அவர்களது பஸ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது காட்டுப்பகுதியில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் சரமாரியாக வீரர்களின் பஸ்சை நோக்கி சுட்டார்கள். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், சி.ஆர்.பி.எப் வீரர்களும் திருப்பிச்சுட்டார்கள். இந்த துப்பாக்கிச்சூட்டால் அந்த பகுதி முழுவதும் வெடி சத்தத்துடன் காணப்பட்டது. தீவிரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில்  8 வீரர்கள் பலியானார்கள்.

2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதல் -குறித்து துவக்கத்தில் வந்த தகவலில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் புதர் பகுதியில் இருந்து திடீரென பாய்ந்து வீரர்களை நோக்கி சுட்டார்கள். இந்த தாக்குதல் பாம்போரின் பிரெஸ்ட் பால் பகுதியில் நடந்தது என்றும், இது தலைநகர் ஶ்ரீநகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம் என தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதும் ஆபத்தான நிலையில் இருந்த 4 வீரர்கள் உள்பட படுகாயம் அடைந்த 28 வீரர்கள் ராணுவ முகாம் மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிசிச்சை அளிக்கப்பட்டது.பஸ்களில் செல்லும் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

இதற்கு முன்னர் இந்த மாதம் 3ம் தேதியன்று  பெஜ்பெகராவில் எல்லை பாதுகாப்பு படையினரை(பி.எஸ்.எப்) ஏற்றிச்சென்ற பஸ்சை தீவிரவாதிகள் மீது தாக்கினார்கள்., அந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த இரு தினங்களில் நடத்தும் 4வது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னர் சோபூர் பகுதியில் தீவிரவாதிகள் 3தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள். இதில் ஒரு வெடி குண்டு வெடிக்காமல் செயலிழக்க செய்யப்பட்டது. இந்த வெடி குண்டு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கு முன்னர் ஶ்ரீநகர் பகுதியில் அது செயலிழக்க செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்