முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 8 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 8 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் வீர மரணத்திற்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது.,

ஜம்மு-காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் உயிர்தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.  மிகுந்த அர்பணிப்புடன் அவர்கள் தங்கள் நாட்டுக்கு சேவை செய்துள்ளனர். அவர்களின் மறைவு வலியை உண்டாக்குவதாக உள்ளது.  இவ்வாறு தெரிவித்துள்ளார். மற்றொரு ட்விட்டில்., என் எண்ணமெல்லாம் இன்று உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தோடு இருக்கும். காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளால் சமீபத்தில் நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் சம்பவம் இதுவாகும். காஷ்மீர் தலைநகர், அருகே பாம்பூர் என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் வந்த வாகனத்தை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் 8 வீரர்கள் பலியாயினர். 21 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்