முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எஸ்.ஜி விவகாரத்தில் சீனாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சு நடத்தும்: அதிகாரி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழுவில் இந்தியா இணைவது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக ஆவதற்கு 2011-ம் ஆண்டு முதலே முயற்சித்து வருகிறது. இதில் இணைந்து விட்டால் இந்த குழுவில் உள்ள நாடுகளிடம் சிவில் அணுசக்திக்கு தேவையான பொருட்களை பெறவும், இயலும்.

இந்த அமைப்பில் உறுப்பினர் ஆவதற்கு கடந்த மே மாதம் 12-ந்தேதி இந்தியா முறைப்படி விண்ணப்பித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான ஆதரவு தெரிவித்த போதிலும், சீனா, அயர்லாந்து, துருக்கி, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, நியூசிலாந்து ஆகியவை சேர்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, சியோலில் நடைபெற்ற அணுசக்தி விநியோக கூட்டமைப்பு (என்.எஸ்.ஜி) நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா குறித்து எந்த முடிவும் எடுக்காமல் நிறைவடைந்தது.

இந்நிலையில், என்.எஸ்.ஜி விவகாரத்தில் சீனா உடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:-

நாளை(திங்கட்கிழமை) முதல் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா முறைப்படி சேருகிறது. என்.எஸ்.ஜி தொடர்பாக இந்த வருட இறுதியில் முழுமையான சிறப்பு அமர்வு நடத்தப்படும். என்.எஸ்.ஜி விவகாரத்தில் சீனா உடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும். அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழுவில் இந்தியா இணைவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்தியா இணைவதற்கு ஒரே ஒரு நாடு மட்டும் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது.

சில நாடுகள் விதிமுறைகள் தொடர்பாக சில ஆட்சேபனைகளை எழுப்பின. ஆனால் ஒரே ஒரு நாட்டை தவிர மற்ற நாடுகள் இந்தியா இணைவதை எதிர்க்கவில்லை. அணு ஆயுத பரவல் தடை விவகாரத்தில் நம்முடைய நிலைப்பாடு தெரிந்ததே. அணு ஆயுத பரவல் தடை உத்தரவை அமல்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று என்.எஸ்.ஜி கூறுகிறது. என்.பி.டி-யின் விதிகள் அனைத்தையும் ஏற்கனவே நாம் நடைமுறைபடுத்தியிருக்கிறோம். இவ்வாறு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago