முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன பஸ் தீ விபத்தில் 30 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் :  சீன பஸ் விபத்தில்  30பேர் பலியானதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள ஹனான் மாகாணத்தில் ஒரு பஸ் 56 பயணிகளுடன் சென்று கொண்டிந்தது. இந்த பஸ்சில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 30 பேர் கருகி உயிரிழந்தார்கள். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது . விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின் குவா வெளியிட்டுள்ளது.

பஸ் தீ விபத்தில் படு காயம் அடைந்த 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விபத்துக்கு காரணமாக பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பஸ் தீ விபத்து காட்சிகள் அரசு இணைய தள வீடியோ காட்சியில் காட்டப்பட்டது. அந்த வீடியோவில் தீ புகை பஸ்சுக்கு பின்னால் இருந்து வருவதையும் அப்போது அதன் அருகே பயணிகள் நிற்பதையும் காண முடிந்தது. பஸ் சாலைப்பகுதியில் இருந்த தடையில் மோதியதால் விபத்து ஏற்பட்டு தீ ஏற்பட்டு இருக்கலாம் என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

சாலை விபத்துக்கள் சீனாவில் சர்வசாதாரணமாக நடந்து வருகின்றன. ஆண்டுதோறும் 2லட்சத்து 50ஆயிரம் மக்கள் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள நகரங்களின் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் பஸ்களையே பயன்படுத்துகிறார்கள். இந்த போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களுக்குள் உள்ள போட்டியால் பஸ்களை அதி வேகமாக சாலைகளில் ஓட்டிச்செல்கின்றன. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்