முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 தமிழக மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான குமரி மாவட்டத்தை சேர்ந்த 4 மாணவர்கள் புதுவாழ்வு தொடங்க தலா ரூ 2 லட்சம் உதவித்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு முதலமைச்சர் ஜெயலலிதா ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்களின் குடும்ப வறிய நிலையினைக் கருத்தில் கொண்டு, விடுதலையான மீனவர்கள் தமிழ்நாட்டில் புது வாழ்வை துவங்க ஏதுவாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மீனவர் ஒவ்வொருவருக்கும் 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த 4 தமிழக மீனவர்கள் ஐக்கிய அரபு நாட்டில், துபாய்  நாட்டினை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான மீன்பிடி படகில் ஒப்பந்த தொழிலாளர்களாக அஜ்மான் கடல் பகுதியில் பணிபுரிந்து வந்தனர். கடந்த 6.2.2016 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்று, மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வழி தவறி, ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள் சென்று விட்டனர். ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் சென்றதன் காரணமாக, அந்நாட்டு கடலோர காவற்படையினரால் 7.2.2016 அன்று கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையின்போது, ஈரான் நாட்டு கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து, ஈரான் நாட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனையறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஈரான் நாட்டு கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்திட உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்கள். முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி, தமிழக அரசு அதிகாரிகள் ஈரான் நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளையும், மத்திய அரசின் வெளிவிவகாரத் துறையினையும் தொடர்பு கொண்டு, மேற்குறித்த 4 மீனவர்களின் விடுதலைக்கான அனைத்து சட்ட உதவிகளையும் அளித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின்  ஆணையின்படி தமிழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக 4 தமிழக மீனவர்களும் ஈரான் நாட்டு அரசால் 30.4.2016 அன்று விடுதலை செய்யப்பட்டு கடந்த 1.5.2016 அன்று சென்னை வந்தடைந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்களின் குடும்ப வறிய நிலையினைக் கருத்தில் கொண்டு, விடுதலையான மீனவர்கள் தமிழ்நாட்டில் புது வாழ்வை துவங்க ஏதுவாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மீனவர் ஒவ்வொருவருக்கும் 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago