முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் கிராண்ட் சிலாம் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற ஜோவிக்-செரினா வில்லியம்ஸ் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

லண்டன் :  உலக புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட் சிலாம் போட்டியில் 4வது சாம்பியன் பட்டத்தை பெற நோவக் ஜோவிக்கும், 22வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றஅமெரிக்க வீராங்கனை செரினான வில்லியம்சும் தீவிரம் காட்டி வருகிறார்கள். உலக டென்னிஸ் போட்டிகளில் கிராண்ட் சிலாம்  சாம்பியன் போட்டிகள் மிகப்பெரும் போட்டிகளாகும். இந்த கிராண்ட் சிலாம் போட்டிகள் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் , அமெரிக்க ஓபன் என  நடத்தப்படுகின்றன.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி முடிந்து தற்போது விம்பிள்டன் கிராண்ட்சிலாம் போட்டி நடைபெறவுள்ளது. லண்டனில் நடக்கும் இந்த பந்தயம் புல் தரையில் நடக்கும் கிராண்ட் சிலாம் போட்டியாகும்.  இதில் உலக நம்பர் ஓன் ஆட்டக்காரரான நோவக் ஜோவிக் கடந்த 2011, 2014,2015ஆண்டுகளில் விம்பிள்டன் கிராண்ட் சிலாம் சாம்பியன்களை  வென்று சாதனை படைத்திருந்தார். அவர் கிராண்ட் சிலாம் போட்டியின் சாம்பியனாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆண்டி முர்ரேவை தோற்கடித்து 12வது பெரும் சாம்பியன் பட்டத்தை ஜோவிக் வென்றார். நடப்பு விம்பிள்டன் போட்டியில் உலக நம்பர் 2வது இடத்தில் இருக்கும் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே ஜோவிக்குக்கு சவால் எழுப்புவார். அவர் கடந்த 2013ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.

ஜோவிக்கை போல அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளார். அவர்  22வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைக்க இந்த போட்டியில் களம் இறங்குகிறார். அவர் 7வது முறையாக விம்பிள்டன் கிராண்ட் சிலாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார்.

செரினா தனது டென்னிஸ் வரலாற்றில் 22வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றினால் ஜெர்மனியின் ஸ்டெபி கிராப்பின் சாதனையான 22வது கிராண்ட் சிலாம் வெற்றி சாதனையை சமன் செய்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்