முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் முதல் முறையாக ஆடும் 6 வீரர்கள் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி அறிவிப்பு

புதன்கிழமை, 29 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

பெர்த்  -  பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் ஆடும் ஹாக்கி அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது இந்த அணியில் இடம் பெற்றுள்ள 6வீரர்கள் முதன் முறையாக ஒலிம்பிக்கில் ஆடுகிறார்கள். பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது. 4ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சர்வதேச விளையாட்டு திருவிழாவில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் இடம் பெற்றுள்ள 6 வீரர்கள் முதல்முறையாக தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வருகிறார்கள். ஆஸ்திரேலிய ஹாக்கி அணி கடந்த  3ஆண்டுகளாக சர்வதேச ஹாக்கியின் பெரும் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அந்த அணி கடந்த 2014ம் ஆண்டு,  உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதனையடுத்து 2015ம் ஆண்டில் அந்த அணி ஹாக்கி வேர்ல்டு லீக்போட்டியிலும், 2016ம் ஆண்டு சாம்பியன் டிராபி கோப்பையையும் அந்த அணி கைப்பற்றியது. இந்த ஆண்டு நடந்த சாம்பியன் டிராபி ஹாக்கிப்போட்டியில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தோற்கடித்து பரிசுக்கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மார்க் நோவல்ஸ் உள்ளார்.

அந்த அணியில் அனுபவம் மிக்க மத்திய தற்காப்பு வீரர் நோவல்ஸ், 3 ஒலிம்பிக்கில் ஆடிய ஜாமி ட்வையர், ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள பிளாக் கோவர்ஸ், டேனியல்  பெலே, ஜேக் வீட்டன், மாத்யூ டாசன், கோல் கீப்பர் ஆண்ட்ரு சார்ட்டர்,மற்றும் டிரிஸ்டன் ஒயிட் ஆகியோர் முதன்முறையாக ஒலிம்பிக்கில் ஆடும் வீரர்கள் ஆவார்கள். 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது. அப்போது அந்த அணியில் நோவல்சும், ட்வையர் இடம் பெற்றிந்தார்கள்.  அந்த அனுபவம் மிக்க வீரர்கள் மீண்டும் ஒரு ஒலிம்பிக் தங்கப்பதக்கத்துடன் நாடு திரும்ப வேண்டும் என்கிற இலக்குடன் களம் இறங்குகிறார்கள். பிரேசில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற வேண்டும் எண்ணத்திலேயே நாங்கள் செல்கிறோம்.

வெறும் வெண்கலப்பதக்கம் பெறுவது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் அரை இறுதிக்கு அல்லது 5வது இடத்திற்கான ஆட்டத்தில் ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் செல்ல வில்லை என்றார். ஆஸ்திரேலிய ஹாக்கி அணியில் மிக அதிக வயது வீரராக ட்வையர் உள்ளார். அவருக்கு வயது 37 ஆகும். அவர் 4வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் காமன் வெல்த்போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் அவர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது.  காமன் வெல்த் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டபோது, நான் ஓய்வுபெற திட்டமிட்டேன் என்று ட்வையர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்