முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

குற்றாலம்  - குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்க ப்படவில்லை. குற்றாலத்தில் செவ்வாயன்று அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் சீராக விழுந்த தால் சீஸன் மீண்டும் களைகட்டத் தொடங்கியது. ஆனால், மலைப் பகுதிகளில் பெய்த மழையால் அருவிகளுக்கு பிற்பகலில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

பிரதான அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை முதல் இடைவிடாது மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளம் குறைய வில்லை. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், பழைய குற்றாலம் அருவியில் ஓரத்தில் நின்றும், புலியருவி, சிற்றருவியிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.  திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக பாபநாசம் அணைப் பகுதியில் 62 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

குண்டாறு அணைப்பகுதியில் 32 மி.மீ., அடவிநயினார்கோயில் அணைப் பகுதியில் 22 மி.மீ., செங்கோட்டையில் 29 மி.மீ. மழை பெய்துள்ளது.  பாபநாசம் அணையில் நீர்மட்டம் 80.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,389 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந் தது. அணையில் இருந்து 1,054 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 72.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 10 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்