முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உயர் பதவி பெற்ற வடகொரிய அதிபர்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

சியோல் - வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு அந்நாட்டில் புதிதாக உயர் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.வட கொரியா அரசாங்கம், புதிதாக உள்நாட்டு விவகாரங்களுக்கான உயர் கமிஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த ஆணையத்தின் தலைமை பொறுப்பு அந்நாட்டு அதிபர் 33 வயதான கிம் ஜாங் உன்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் பிரதான அமைப்பான சுப்ரீம் மக்கள் அசெம்ப்ளியில்,

கிம் ஜாங் உன் இந்த பதவிக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு குறித்து சுப்ரீம் மக்கள் அசெம்ப்ளி தலைவர் கிம் யாங் நாம் கூறியதாவது, அசைக்க முடியாத நம்பிக்கை, அனைத்து படையினரின் ஒருமித்த விருப்பம் மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் உயரிய பதவிக்கு கிம் ஜாங் உன்னை நாட்டு மக்கள் உறுதி செய்ய உள்ளனர் என்றார். கிம் ஜாங் உன் அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்