முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ‘சிங்கங்கள்’ : பயங்கரவாதி அப்தூர் ரகுமான்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பம்போரில் சி.ஆர்.பி.எப். வாகனம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ‘சிங்கங்கள்’ என்று பயங்கரவாதி அப்தூர் ரகுமான் கொக்கரித்து உள்ளான். காஷ்மீரில் கடந்த சனிக்கிழமை பம்போரில் பஸ்சில் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் இந்த மாதத்தில் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. சி.ஆர்.பி.எப். வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மருமகன் என்று தகவல்கள் வெளியாகியது.  இந்நிலையில் சி.ஆர்.பி.எப். வாகனம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ‘சிங்கங்கள்’ என்று பயங்கரவாதி அப்தூர் ரகுமான் கொக்கரித்து உள்ளான்.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தாய் அமைப்பான ஜமாத்-உத்-தாவாவின் இரண்டாம் தரப்பு தலைவனான அப்தூர் ரகுமான் மாக்கி (ஹபீஸ் சயீத்தின் மருமகன்) ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வாகனம் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளை சிங்கங்கள் என்று பாராட்டி உள்ளான். பாகிஸ்தானின் குஜ்ரங்வாலாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அப்துர் ரகுமான், இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தானியர்கள் இணைய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளான். கூட்டம் தொடர்பான வீடியோ பயங்கரவாத ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. முப்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தும் கலந்துக் கொண்டு உள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்