முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் நாடுகள் அதற்கான விலையை தர வேண்டி இருக்கும்: சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  தீவிரவாதத்தை ஆதரித்து அவர்களை வளர்க்கும் நாடுகள் அதற்கான விலையை தர வேண்டியிருக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரித்தார்.  தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் இளைஞர்கள் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,  பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு உலக அளவில்  பருவ நிலை மாற்றம், வறுமை ஒழிப்பு, ஊழல் தடுத்தல் ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தீவிரவாதத்தை முற்றிலும் ஒடுக்குவதற்கு தொடர்ந்து பாடுபடவேண்டும்.

தீவிரவாதிகளில் நல்லவர்கள் என்றும் தீயவர்கள் என கிடையாது. தீவிரவாதம் என்றாலே மோசமான, அழிவை தரக்கூடியது ஆகும். இந்தியா வருகிற அக்டோபர் மாதம் கோவாவில் 8வது வருடாந்திர பிரிக்ஸ் மாநாட்டை நடத்துகிறது. உலகில் உள்ள மக்கள் தொகைகளில்  42சதவீதம் பேர் பிரிக்ஸ் நாடுகளில் இருக்கிறார்கள்.  உலக மொத்த உள் உற்பத்தியில்  16லட்சம்கோடி டாலர் பிரிக்ஸ் நாடுகளில் உள்ளது.இந்தியாவில் உள்ள 80கோடி மக்கள் 35வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் இளைஞர்கள் ஆதார வளம் அதிகளவில் உள்ளது.இந்த இளைஞர்களின் மூலம் நாடு வளம் பெறும் .இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago