முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக 13 ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைது : பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல்(துருக்கி  - துருக்கி தலைநகர் இஸ்தான் விமானநிலையத்தில் நடந்த தற்கொலைப்படை நடத்திய வெடி குண்டு தாக்குதல் தொடர்பாக13 ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். துருக்கி தலைநகர் இஸ்தான் புல்லில் உள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று(ஜூன் 28) ஐ.எஸ்.தீவிரவாதிகள் துப்பாக்கித்தாக்குதல் மற்றும் வெடி குண்டு தாக்குதலை நடத்தினார்கள்.

தற்கொலைப்படையினர் நடத்திய இந்த தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்தது. இதில் 13 வெளிநாட்டவர்கள் ஆவார்கள்.. 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலி எண்ணிக்கை விவரத்தை துருக்கி அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது.அதாதுர்க் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலால் துருக்கி நாடே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

துருக்கியில் நடந்த பெரும் பயங்கர தாக்குதலாக இந்த விமான நிலையத்தாக்குதல் உள்ளது. விமான நிலைய தாக்குதலை தொடர்ந்து, போலீசார் இஸ்தான்புல் நகரில் போலீசார்  16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது 3 வெளிநாட்டவர்கள் உள்பட 13 ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. துருக்கியில் கடந்த ஆண்டு பல பயங்கர தாக்குதல்களை குர்தீர்ஷ்,ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள்.

இஸ்தான் விமான நிலையத்திற்குள் 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் நுழையும் போது ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து அங்கிருந்த பயணிகளை நிலைய குலையச்செய்தார். இந்த பதட்ட நிலையினை பயன்படுத்தி இதர இரு தீவிரவாதிகள் விமான நிலையத்திற்குள் ஊடுருவி மேலும் பயங்கர உயிரிழப்புகளை ஏற்படுத்தினார்கள். விமான நிலையத்தின் நுழைவு வாயிலில்  தீவிரவாதி வெடித்த குண்டு வெடிப்பால் அங்கு தீப்பிழம்பு எரியும் காட்சியை சமூக இணைய தளங்கள் வெளியிட்டு இருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்