முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடிக்கு உலக வங்கி பாராட்டு

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. உலக வங்கியின் குரூப் தலைவர் ஜிம் யாங் கிம் நேற்று தலைநகர் டெல்லியில் நேற்று நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி, மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் நடந்து வரும் பல்வேறு திட்டங்களுக்கு உலக வங்கி அளிக்கும் நிதியை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது . இதன் பின்னர் உலக வங்கியின் குரூப் தலைவர் கிம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

 பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் மேற்கொண்டு வரும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், உலக வங்கி அளிக்கும் நிதியுதவி மிகவும் அதிக அளவில் உள்ளது.  இந்த கடன் நிதி வழங்கும் அளவு 500கோடி டாலராக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு கடன் நிதி உதவி தொடரும்.இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி 7.6சதவீதமாக இருக்கிறது. உலக பொருளாதாரத்தில் மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவுக்கு பிரகாச வாய்ப்பு இருக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு ஒரு பாடமாக இந்தியா திகழலாம் . இவ்வாறு அவர் தெரிவித்தார். அருண்ஜெட்லி கூறுகையில்,

உலகம் மற்றும் பொருளாதார  சூழல் குறித்து நாங்கள் உலக வங்கின் தலைவருடன் விவாதித்தோம். இந்த கூட்டத்தில் உலக வங்கி இந்தியாவுக்கு அளிக்கும் நிதி உதவி குறித்து முக்கியமாக பேசப்பட்டது.இந்தியாவின் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு நிதி உதவி தேவைப்படுகிறது.இந்த நிதி உதவியை உலக வங்கி அளித்து உதவி வருகிறது என்றார்.

உலக நாடுகளில் 189 நாடுகளில்பொருளாதார நிலையில் இந்தியா 130வது இடத்தில் உள்ளது என உலக வங்கியின் வர்த்தக செயல்பாடு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலகிலேயே தொழில் துவங்கி சுமூகமாக தொழில் நடத்த உதவும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. உலக நாடுகளில் வர்த்தகம் செய்வதற்கு சுமூக சூழல்உள்ள  நாடுகள் பட்டியலில் சீனா 84வது இடத்தில் இருக்கிறது. இந்தியா 88வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago