முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தீ விபத்தில் 8 பேர் பலி

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

மும்பை  -  மும்பை தீ விபத்தில்  8பேர்  பலியானார்கள். மேலும் ஒருவர் கடுமையாக காயம் அடைந்தார். மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஜூகு காலியில் உள்ள  மெடிக்கல் ஸ்டோரில் நேற்று அதிகாலை 6 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த மருந்து கடை கட்டிடத்தின் தரை  தளத்தில் உள்ளது. அந்த கடைக்குமேல் 2வது 3வது தளங்களில் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மெடிக்கல் ஸ்டோரில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததால் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.

இந்த தீயின் வேகம் கடுமையாக இருந்ததால்  மேல் தளங்களில் வசித்தவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தார்கள் என்று தீணையணைப்புத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும் தீ விபத்திற்கான சரியான காரணம் தெரிய வில்லை. உரிய விசாரணைக்கு பின்னரே தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெரிய வரும்.  தீ விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கூப்பர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

 இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காலை 6.15மணிக்கு இந்த தீ விபத்து குறித்து தகவல்வந்தது. நாங்கள் 3 தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். ஒரு வாட்டர் டேங்கர் மற்றும் 2ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது அந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago