முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் : அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பா.ஜ.க தலைவர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். அமைச்சரவை மாற்றங்கள் குறித்து அறிவிப்பை தனது, ஆப்பிரிக்க பயணத்திற்கு முன் அவர் வெளியிடுவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய இணை அமைச்சர்களாக உள்ள பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே அமைச்சரவையில் உள்ள சில காலியிடங்களும் நிரப்பப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சில இளம் அமைச்சர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். அசாம் முதல்வராக சர்பானந்தா சோனோவால் தேர்வு செய்யப்பட்ட பிறகு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பதவி காலியாக உள்ளது. மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா கட்சி தலைவராக பட்டீல் தான்வே நியமிக்கப்பட்ட பிறகு தனது மத்திய உணவு மற்றும் பொது விநியோக வழங்கல் துறை துணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு வரும் ஜூலை 6-ம் தேதி சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அமைச்சரவை மாற்றங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி உள்பட தற்போது 70 பேர் உள்ளனர். இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்