முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் கும்ளேவின் தீவிர ரசிகன் : முரளி விஜய்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2016      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு  -  நான் அனில் கும்ளேவின் தீவிர ரசிகன் . தலைமை பயிற்சியாளராக தேர்வு பெற்றுள்ள கும்ளேவின் கீழ் நாங்கள் நிறைய பாடம் கற்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க நிலை ஆட்டக்காரரான முரளி விஜய் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அனில் கும்ளே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்திய அணி தற்போது பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் முகாமிட்டு பயிற்சி பெறுகிறது.

அங்கு இந்திய அணியின் துவக்க  ஆட்டக்காரர் முரளி விஜய் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எனது முதல் டெஸ்ட் கும்ளேவின் கடைசி டெஸ்ட்டாக இருந்தது. எனவே அவருடன் அதிக நேரம் செலவிட்டது கிடையாது. நான் அவரது தீவிர ரசிகன்.  அவரிடம் இளம் வீரர்கள் கிரிக்கெட்பேசுவதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதும் மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். மேற்கு இந்திய அணியுடன் 3டெஸ்ட் போட்டிகளில்  ஆடுகிறோம்.இந்த தொடருக்கு பின்னர் நாங்கள் இந்தியாவில் நியூசிலாந்துடன் மோதுகிறோம்.

தற்போதைய சுற்றுப்பயணத்தால் நியூசிலாந்து அணியுடன் ஆடும் போட்டியின்போது நம்பிக்கையுடன் களம் இறங்குவோம்.எனவே மேற்கு இந்திய அணியுடன் ஆடும் டெஸ்ட் தொடரை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். ரவி சாஸ்திரி இந்திய அணியின் டைரக்டராக இருந்துள்ளார். தற்போது கும்ளே தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இருவரது சேவையில் இந்திய அணி நல்ல நிலையை பெற்றிருக்கிறது . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago