முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆக.1 ம்தேதி முதல் சான்றிதழ் சரிப்பார்ப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய .விஏ.ஓ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு வரும் ஆகஸ்ட் 1 ம்தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான தேர்வு  கடந்த பிப்ரவரி 28 ம்தேதி, நடந்தது.    813காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது.  இந்த தேர்வை   7, லட்சத்து 70 ஆயிரத்து 860 பேர் எழுதினர்.  இவர்களில்  7லட்சத்து 61 ஆயிரத்து 42 பேர்களின்  மதிப்பெண், தரவரிசை நிலை (தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம்.  

விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள்  ஆகஸ்ட் 1 ம்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவர்களின் தரவரிசை நிலைகாலியிட நிலை  மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர்.கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்படும்.மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்