முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலுமி இல்லாத கப்பலாக காங்கிரஸ் கடலில்மூழ்குகிறது : பா.ஜ.க. கடும் தாக்கு

திங்கட்கிழமை, 4 ஜூலை 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி  -  மாலுமி இல்லாத கப்பலாக காங்கிரஸ் கட்சி மூழ்கி கொண்டிருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி கடுமையாக தாக்கியது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஶ்ரீகாந்த் சர்மா நேற்று டெல்லியில் கூறியதாவது,  மாலுமி இல்லாத கப்பலாக காங்கிரஸ் கட்சி மூழ்கி கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் அந்த கட்சியினருக்குள்ளேயே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 3ஆண்டுகளில் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. மனப்புழுக்கத்தில் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை விமர்சிக்க துடிக்கிறது.

நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்தினரையே காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கிறது. எதிர் மறை அரசியலையே காங்கிரஸ் கட்சி கடைபிடிக்கிறது.  பிரதமர் மோடி அரசின் நல திட்டங்கள் ஏழை மக்களின் நலன்களை சார்ந்ததாகவே உள்ளது. முத்ரா திட்டத்தில் 3.3கோடி மக்கள் பலன் பெற்றிருக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிபிரியங்காவை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த வித பிரச்சாரம் செய்தாலும் அந்த மாநிலத்தில் அவர்கள் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago