முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் தங்கத்திருப்பணிகள்: அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2016      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட தங்கத்திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:-
 
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதானமிக்க அருள்மிகுபார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ யோகநரசிம்மர்,ஸ்ரீ வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார் மற்றும் குளக்கரைஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் விமானங்களுக்கும், பின்கோபுரவாசல் விமானம், பாண்டி கோபுரம், நரசிம்மர் கல்யாணமண்டபம், நரசிம்மர்மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் விமானம், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2005ஆம் ஆண்டில்மஹாசம்ரோக்ஷ்ணம் நடைபெற்றது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, தற்போது மஹாசம்ரோக்ஷ்ணம் நடைபெறுவதன்தொடக்கமாக, இத்திருக்கோயிலில் துன்முகி வருடம் ஆனி மாதம் 26ம் தேதிபாலாலயம் நடைபெறவுள்ளது. இதற்கான திருப்பணிகள் சுமார்ரூ. ஒரு கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திருப்பணிகள் பழமைமாறாமல் தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி சிறப்பாகசெயல்படுத்தப்படும்.மேலும் ரூ.55 இலட்சம் மதிப்பில் சுவாமி தங்கக் கிரீடம், கர்ணபத்திரம்,ஸ்ரீசடகோபன் மற்றும் கவசங்கள் ஆகியவற்றிற்கான தங்கத் திருப்பணிகளும்மேற்கொள்ளப்பட உள்ளன.மேற்கண்ட திருப்பணிகள் குறித்து  நேற்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் .எஸ்.இராமச்சந்திரன்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணிமற்றும் துறை அலுவலர்கள் நடைபெற்று வரும் ஏற்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்