முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி ஏய்ப்பு வழக்கு: பிரபல கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 21 மாத சிறைத்தண்டனை

புதன்கிழமை, 6 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

மேட்ரிட்  - வரி ஏய்ப்பு வழக்கில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சிக்கு 21 மாத சிறைத்தண்டனையும், 12 கோடி ரூபாய் அபராதமும் விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இறுதிப்போட்டியில் சிலி அணியிடம் தோற்று அர்ஜென்டினா கோப்பையை இழந்தது.

கடந்த ஆண்டும் இறுதிப்போட்டியில் சிலியிடம் தோற்றிருந்தது. இதனால் அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அணியின் தலைமை பயிற்சியாளரும் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், வரி விதிப்பை தவிர்ப்பதற்காக போலி நிறுவனங்களை உருவாக்கியதாக மெஸ்சி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மீது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்சி மற்றும் அவரது தந்தை இருவருக்கும் தலா 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மெஸ்சிக்கு 12 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் சட்டத்தின்படி, 2 ஆண்டுகளுக்குள் தண்டனை பெற்றால் அதனை தற்காலிகமாக ரத்து செய்ய முடியும். எனவே, மெஸ்சி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்காது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்