முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடனடி நடவடிக்கை: மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. மாணவர் அணி தீர்மானம்

வியாழக்கிழமை, 7 ஜூலை 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் கிராமப்புற மற்றும்அடித்தட்டு மாணவர்களுக்கு சமவாய்ப்பை மறுக்கும் தேசிய நுழைவுத் தேர்வான   மருத்துவ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் , தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை அமைக்க விரைந்து முடிவெடுக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி  அதிமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அதிமுக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம், இலக்கிய அணி செயலாளர் வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு

தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ் நாட்டின்மேம்பாட்டை கவனத்தில் இருத்தியும், எண்ணிலடங்கா முன்னோடிதிட்டங்களையும், முன்னேற்றத் திட்டங்களையும் செயல்படுத்தி வருபவர்முதல்வர் ஜெயலலிதாதமிழகத்தின் சட்டப்பூர்வ நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழகமக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும், தமிழகத்தில் கிராமப்புற மற்றும்அடித்தட்டு மாணவர்களுக்கு சமவாய்ப்பை மறுக்கும் தேசிய தகுதி மற்றும்நுழைவுத் தேர்வான   நீ்ட் மருத்துவ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும்,மாணவ, மாணவிகளைஎம்.பி.பி.எஸ்., மற்றும் மருத்துவ முதுநிலை கல்வியில் சேர்க்க,தற்போது தமிழகம் செயல்படுத்தி வரும் நேர்மையான வெளிப்படையான மாணவர்சேர்க்கை முறையை நிரந்தரமான முறையில், தொடர மத்திய அரசு சட்டப்பூர்வநடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழகத்தில்எய்ட்ம்ஸ்  மருத்துவக் கல்லூரியுடன்இணைந்த மருத்துவமனை அமைக்க விரைந்து முடிவு எடுக்கவும், அதற்கானநிதியையும் விரைந்து ஒதுக்கவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைவழக்காடு மொழியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும், பழம் பெருமைமிக்கதமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சி மொழியாக ஆக்கவும்முதல்வர் ஜெயலலிதாவின்  வழியில் மத்தியஅரசை தொடர்ந்து வலியுறுத்துவதென அதிமுக மாணவர் அணி தீர்மானிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, கண்ணக்குறுக்கைகிராமத்தைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளி மகள் செல்வி பிரியதர்ஷினிமற்றும் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், சீரமங்கலம்,அணவயல் பூசாரியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் செல்விமேகலா ஆகியோருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம்கிடைத்தும் வறுமை நிலையில் மருத்துவம் படிக்க இயலாத சூழ்நிலையில்,முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைத்தனர்.எந்தவொரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாகஇருக்கக் கூடாது என்ற தொலைநோக்குச் சிந்தனையுடைய முதல்வர் ஜெயலலிதா ஏழை மாணவிகள் பிரியதர்ஷினிமற்றும் மேகலா ஆகியோரின் வேண்டுகோளை தாயுள்ளத்தோடு பரிசீலித்து,அம்மாணவிகளின் மருத்துவப் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டுஎம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து முதலாமாண்டுகல்விக் கட்டணம் ரூ. 1,10,000 மற்றும் புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட்சேரிடபிள் டிரஸ்டிலிருந்து ரூ. 75,000 மாணவிகளிடம் நேரில் வழங்கி ஏழைமாணவிகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து பணிந்துவணங்குகிறது மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்