முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட டல்லாஸ் தாக்குதலால் அதிர்ச்சியின் பிடியில் அமெரிக்கா : ஜனாதிபதி ஒபாமா வேதனை

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

வார்சா(போலந்து)  - 5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட டல்லாஸ் பகுதி தாக்குதலால் அமெரிக்கா அச்சம் மற்றும் அதிர்ச்சியின் பிடியில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் பகுதியில்  நடந்த தாக்குதலில் 5போலீசார்  கொல்லப்பட்டதுடன் 6பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலால் அமெரிக்க மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலந்தில் உள்ள வார்சா நகரில்  நேட்டோமற்றும் ஐரோப்பிய  தலைவர்களை சந்திக்க சென்ற போது ஜனாதிபதி ஒபாமா கருத்து வெளியிட்டார். 

அதில், சட்ட அமலாக்கத்துறைக்கு எதிரான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. இந்த தாக்குதலால் அமெரிக்கா அதிர்ச்சியும், அச்சத்திலும் ஆழ்ந்துள்ளது என்று ஜனாதிபதி ஒபாமா கூறியிருந்தார். டல்லாஸ் தாக்குதல் குறித்து, அந்த மாகாண மேயர் மைக் ராவ்லிங்சுடனும் ஒபாமா பேசினார். அப்போது இந்த தாக்குலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆதரவு அளிப்பதாகவும் , துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்