முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு மம்தா பானர்ஜி, டோனி, கும்ளே வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா  - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினருமான சவுரவ் கங்குலிக்கு நேற்று 44வது பிறந்த நாள் பிறந்தது. இதனையொட்டி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்தன.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் கேப்டன் டோனி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்  அனில் கும்ளே ஆகியோர் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து செய்தியில்,  நீங்கள் அனைத்து வெற்றிகளையும், மகிழ்ச்சியான வாழ்க்கை பெறவும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் டோனி  விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், இனிய பிறந்த நாள் வாழ்த்து டாடா(கங்குலி) என தெரிவித்துள்ளார். இந்திய அணிககு அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற பெருமை கங்குலிக்கு உண்டு. அந்த சாதனையை தற்போதுதான் கேப்டன் டோனி முறியடித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ளே ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .உங்கள் மீது எல்லாம் வல்ல இறைவனின் அன்பும், ஆசியும் பொழியட்டும் என தெரிவித்துள்ளார். கங்குலி இந்திய அணியில் ஆடியபோது, கும்ளேவும் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர் ஆவார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்தபிறந்த நாள் வாழ்த்தில், இனிய பிறந்த நாள் டாடா .ந்திய அணியின் கொடி உச்சத்தில் பறக்க தொடர்ந்து உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

சேவாக்கிற்காக துவக்க ஆட்டக்காரர் நிலையினை கங்குலி விட்டுகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்தில், இந்திய கிரிக்கெட்டின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியமும் தனது பிறந்த நாள் வாழ்த்தினை கங்குலிக்கு தெரிவித்து இருக்கிறது.கங்குலி கடந்த 1996ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தான் அறிமுகமான டெஸ்ட்டிலேயே சதம் அடித்து சாதனை அடித்தவர்.

அவர் கேப்டனாக இருந்தபோது 28 வெளிநாட்டு டெஸ்ட்டுகளில் 11ல் வெற்றியை இந்திய அணிக்கு பெற்று தந்தவர் ஆவார். இது இந்திய அணியின் ஒரு கேப்டனின் முக்கிய சாதனை ஆகும். கங்குலி 113டெஸ்ட்டுகளில் 7ஆயிரத்து 213ரன் குவித்தார். அவர் 311 ஒரு நாள் போட்டிகளில் 11ஆயிரத்து 363ரன்களை எடுத்திருந்தார்.அவர் 2008ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தனது உள்ளுர் மைதானத்தில் ஆடும் போது தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்