முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய கால்பந்து தொடர்: இறுதிப்போட்டியில் போர்ச்சுகல் - பிரான்சு பலப்பரீட்சை

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

மார்செலி - பிரான்சில் நடந்து வரும் 15-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி தொடரில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், போர்ச்சுகலும் பலபரீட்சை நடத்தவுள்ளன.  மார்செலி நகரில்  நேற்றுமுன்தினம் நடைபெற்ற 2-வது அரைஇறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனியும், முன்னாள் உலக சாம்பியன் பிரான்சும் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபாராமாக செயல்பட்ட பிரான்சு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி  இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை நாளை (10-ம் தேதி)சந்திக்கின்றது. இந்த வெற்றி மூலம் பிரான்ஸ் அணிக்கு, தற்போது தங்கள் சொந்த மண்ணில் யூரோ 1984, உலகக்கோப்பை 1998-க்குப் பிறகு கோப்பையை வெல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஜெர்மனி அணியில் போடெங், ஹெக்டர், ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர், முல்லர், பொடோல்ஸ்கி போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். பிரான்சில் போக்பா, மட்டூய்டி, கிரீய்ஸ்மேன், லோரிஸ், கிரவுட் என்று நம்பிக்கை நட்சத்திரங்கள் இருந்தனர். இதில் ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் போடெங் காயமடைந்ததும் ஜெர்மனிக்கு சற்றே அயர்ச்சியை ஏற்படுத்தியது. 3-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு இடது புறம் கார்னர் கிடைத்தது. அந்த ஷாட் பெனால்டி பகுதி வரை பயேட்டினால் வந்தது அங்கு ஜெர்மனி அதனை தடுத்தது. 11-வது நிமிடத்தில் ஜெர்மனி வலது புறம் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டது கிம்மிஸ் அடித்த கிராஸ் தடுக்கப்பட்டது, ஆனால் ஜெர்மனியும் தங்கள் வேலைகளைக் காட்டத் தொடங்கியது.

இதற்கு அடுத்த கணத்திலும் கிம்மிச், முல்லர் சேர்க்கையில் ஜெர்மனி பிரான்ஸ் கோல் அருகே அச்சுறுத்தியது. 14-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கேன் அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் ஹியூகோ லோரிஸ் வலது புறம் பாய்ந்து தடுத்தார். இதற்கு அடுத்து 15-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா, ஒரு மரடோனா வேலையைச் செய்தார், ஜெர்மனி வீரர் கேனைக் கடந்து தனிப்பட்ட முறையில் 50 அடிகள் பந்தை வேகமாக எடுத்து வந்தார், ஆனால் கடைசியில் கிம்மிச்சினால் எதிர்கொள்ளப்பட்டார்.

இப்படியே ஆட்டம் விறுவிறுப்பின் உச்சகட்டத்தில் இருந்தது. 19-வது நிமிடத்தில் மட்டூய்டியை ஏமாற்றி குரூஸ் பந்தை பிரான்ஸின் கோல் பகுதிக்குள் சென்று கோல் நோக்கி அடித்த ஷாட் அடிக்க முற்பட்டபோது போக்பா அவரை முறையற்ற விதத்தில் தடுத்தார், ஜெர்மனி பெனால்டி கேட்டது, ஆனால் பாக்சிற்கு வெளியே ப்ரீ கிக் அளித்திருக்க வேண்டும், ஆனால் நடுவர் அசரவில்லை. 45-வது நிமிடத்தில் பிரான்ஸ் பெற்ற கார்னர் ஷாட் ஜெர்மனி கோல் அருகே இருந்த ஈவ்ராவுக்கு உயரமாக வர அவர் பந்தை தலையால் முட்டினார், கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைக்க பிரான்ஸ் வீரர் ஈவ்ராவை கவர் செய்யும் முயற்சியில் ஜெர்மனி கேப்டன் ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருந்தார், ஆனால் ஈவ்ரா, ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் இருவரும் கார்னர் ஷாட்டை தங்கள் வசம் கொண்டு வர எம்பினர் அப்போது ஷ்வெய்ன்ஸ்டெய்ஜர் கையில் பந்து பட்டது.

ஆனால் இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை, பிரான்ஸ் வீரரும் கையில் அடிக்க வேண்டும் என்று அடிக்கவில்லை, முழுக்க முழுக்க அந்தக் கணத்தினால் தீர்மானிக்கப்பட்ட ஆட்டத்தின் விதியானது. பெனால்டி ஏரியாவில் கையில் வாங்கியதால் பெனால்டி கிக் பிரான்ஸுக்கு அளிக்கப்பட்டது. கிரீய்ஸ்மேன் அதனை நியூயருக்கு வலது புறம் பக்கவாட்டு பாத உதையினால் கோலுக்குள் செலுத்தினார். அவ்வளவு நெருக்கடிக்குப் பிறகு பிரான்ஸுக்கு அதிர்ஷ்ட கோல் வாய்ப்பு முதல் கோலாக அமைந்தது. இரண்டாவது பாதியில் ஜெர்மனி வசம் பந்து இருந்தது.

72-வது நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் பக்கம் அதிர்ஷ்ட தேவதை. கொஞ்சம் ஜெர்மனி வீரர்கள் பக்கமும் தவறு இருந்தது. ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்கள் 3, 4 பேர் அருகில் இருக்கும்போதே ஜெர்மனி தங்கள் பகுதியில் தங்கள் கோல் கீப்பருக்கு அருகிலேயே பந்தை வைத்திருந்தனர், வெளியே அனுப்பியிருந்தால் இந்த கோல் வந்திருக்காது, ஆனால் முஸ்டபியும் ஜோஷுவா கிம்மிச்சும் தங்கள் கோலுக்கு அருகிலேயே பந்தை தங்களுக்கு இடையே ஆடிக் கொண்டிருக்க அருகிலிருந்த பிரான்ஸ் வீரர் போக்பா இருவருக்கிடையே தன் காலை விட்டு பந்தை தன் வசம் கொண்டு வந்தார், கோலுக்கு அருகே இடது புறம் அவர் ஜெர்மனி வீரர்களுக்கு போக்குக் காட்டினார், பிறகு கிரவ்திடம் பந்தை அனுப்ப அவரது முயற்சியை ஜெர்மனி கோல் கீப்பர் நியூயர் சரியாக முறியடிக்கவில்லை, அப்போது கிரீய்ஸ்மேன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே புகுந்து 2-வது கோலை அடித்தார். அதன்பிறகு ஆட்ட நேர முடிவு வரை ஜெர்மனியால் கோல் ஏதும் போடமுடியவில்லை. இதன் மூலம் பிரான்ஸ் அணி ஜெர்மனியை 2-0 என்ற கணக்கில் வீழத்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago