முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைப்பேன் : இந்திய அதி வேக வீராங்கனை டுட்டி நம்பிக்கை

சனிக்கிழமை, 9 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு -  ரியோஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க தகுதி பெற்ற இந்திய வீராங்கனை டுட்டி சந்த்  ஒலிம்பிக்கில் இந்த போட்டியில் பதக்கம் வெல்ல என் ஓட்ட வேகத்தை அதிகரிக்கிறேன் என்று தெரிவித்தார். பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் வருகிற ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 21ம்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் உலக நாடுகளைச்சேர்ந்த பல ஆயிரம் வீரர்கள் , வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 4ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சர்வதேச விளையாட்டு விழாவில் இந்திய அணி 13 விளையாட்டுப்பிரிவுகளில் 100க்கும் மேற் பட்ட வீரர், வீராங்கனைகளுடன் பங்கேற்கிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்கள் தற்போது பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையக மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பந்தயத்தில் பங்கேற்கும் வீராங்கனை டுட்டி சந்த்தும்  இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். அவர் நேற்று கூறியதாவது,

  நான்  60 மீட்டர் வரை நல்ல வேகத்டன் ஓடுகிறேன். ஆனால் கடைசி 40 மீட்டர் தூரத்திற்கு எனது வேகம் குறைகிறது. இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். எனது வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். ரமேஷ் சார் எனது ஓட்ட வேகத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். நானும் அதற்கேற்ப தீவிர பயிற்சியில் இருக்கிறேன். ஒலிம்பிக்கில் 36ஆண்டுக்கு பின்னர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் ஆவார். கடந்த 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பி.டி.உஷா பங்கேற்றார் . அதற்கு பின்னர் தற்போது டுட்டி சந்த் 100 மீட்டர் பந்தயத்தில் பங்கேற்கிறார்.

 பி.டி.உஷாவை மிஞ்சும் வகையில் அதிவேகமாக ஓடி பதக்கம் பெற முடியுமா என கேட்கிறார்கள். தற்போது தடகள வீரர்களின் வேகம் அதிகரித்துள்ளது. பதக்கம் வெல்ல கடுமையான போட்டி இருக்கும். இருப்பினும் நான் கடுமையான வேகத்தில் ஓடுவேன் .
இவ்வாறு அவர் தெரிவித்தார். அவரது பயிற்சியாளர் ரமேஷ் கூறுகையில், டுட்டி சந்த் அதி வேக ஓட்டப்பந்தய வீராங்கனை . அவர் பெண் சிங்கம் போன்றவர். ஒடிசாவை சேர்ந்த சர்வதேசப்போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்