முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.12 கோடியே 45 லட்சத்துக்கு ஏலம் போனது

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதி கோவிலில் கடந்த ஜூன் மாதம் சேகரிக்கப்பட்ட காணிக்கை தலைமுடியில் 14 ஆயிரத்து 500 கிலோ ஏலம் விடப்பட்டதில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.12 கோடியே 45 லட்சம் வருமானம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தலைமுடி சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் சேகரிக்கப்பட்ட காணிக்கை தலைமுடியில் 14 ஆயிரத்து 500 கிலோ ஏலம் விடப்பட்டதில், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.12 கோடியே 45 லட்சம் வருமானம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் ஏராளமான தலைமுடி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக நேற்று முன்தினம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திவ்ய தரிசன பக்தர்கள் பாத யாத்திரையாக திருமலைக்கு வந்தனர்.

இலவச தரிசன பக்தர்களுக்கு 18 மண நேரமுகம், திவ்ய தரிசன பக்தர்களுக்கு 16 மணி நேரமும், பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்களுக்கு 4 மணிநேரமும் ஆனது. வெள்ளியன்று உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியை சேர்ந்த தொழில் அதிபர் திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திட்டம் மற்றும் கோ சம்ரக்‌ஷனத் திட்டம் ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சத்தை காணிக்கையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்