முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: மேற்கு இந்திய தீவுகள் அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

ஆன்டிகுவா : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட மே.இ.தீவுகள் சென்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான 12 பேர் கொண்ட மே.இ.தீவுகள் அணி வருமாறு.,
ஜாசன் ஹோல்டர் (கேப்டன்) கிரேக் பிராத்வெய்ட் (துணைகேப்டன்), தேவேந்திர பிஷோ, ஜெர்மைன் பிளாக்வுட், கார்லோஸ் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ராஜேந்திர சந்திரிகா, ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), கேப்ரியல், லியோன் ஜான்சன், சாமுவேல்ஸ்.

சமீபத்தில் மே.இ.தீவுகள் அணி கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து இருந்த முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்டின் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கெமர்ரோச், ஜெரோம் டெய்லர், ஷாய் ஹோப், மிகுல் கம்மின்ஸ், ஜோமல் வாரிகன் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்