முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல்ஹாசன் நலமுடன் உள்ளார் - சந்திரஹாசன் பேட்டி

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2016      சினிமா
Image Unavailable

சென்னை  - நடிகர் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததைத் தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது கமல் நலமுடன் உள்ளதாக அவரது சகோதரர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து நேற்று நள்ளிரவு கமல்ஹாசன் தவறி விழுந்தார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூரண குணமடைய சில வாரங்கள் ஆகும் என தெரிவித்தனர்.இது தொடர்பாக அவரது சகோதரர் சந்திரஹாசன் கூறுகையில், கமல்ஹாசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளார். இயல்பு நிலைக்கு திரும்ப 4 முதல் 6 வாரம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago