முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு சல்மான்கான் மன்னிப்பு கேட்க மறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2016      சினிமா
Image Unavailable

மும்பை : பெண்கள் பற்றி பேசிய சர்ச்சை கருத்துக்கு நடிகர் சல்மான்கான், மன்னிப்பு கேட்க மறுத்து மகளிர் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார். இதனால் அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சல்மான்கான் சமீபத்தில் ‘சுல்தான்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்த அனுபவம் பற்றி அளித்த பேட்டியில், பெண்கள் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டார். “படப்பிடிப்பில் கஷ்டப்பட்டு நடித்தேன். படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது தளர்ந்த நடையுடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப் போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று அவர் கூறி இருந்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்தன.

பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. சல்மான்கான் வீட்டிலும் முற்றுகை போராட்டம் நடந்தது. மராட்டிய மாநில மகளிர் கமிஷன் சல்மான்கான் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து மீண்டும் 2-வது சம்மனை அனுப்பியது. அதற்கும் ஆஜராக மறுத்த சல்மான்கான் மகளிர் கமிஷனுக்கு தற்போது பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், “நான் சொன்ன கருத்துக்காக எந்த நிலையிலும் மன்னிப்பு கேட்க மாட்டேன். என்னிடம் விளக்கம் கேட்க பெண்கள் கமிஷனுக்கு உரிமை இல்லை” என்று கூறி உள்ளார். இந்த தகவலை மகளிர் கமிஷன் தலைவி விஜயா ரகத்தர் தெரிவித்துள்ளார். சல்மான்கான் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனுக்கும் சல்மான்கான் ஆஜராக மறுப்பதாக கூறப்படுகிறது. சல்மான்கான் நேரில் வந்து மன்னிப்பு கேட்கா விட்டால் அவருக்கு ‘பிடிவாரண்டு’ பிறப்பிக்கப்படும் என்று தேசிய மகளிர் ஆணையம் எச்சரித்து இருந்தது. எனவே சல்மான்கானுக்கு அடுத்து ‘பிடிவாரண்டு’ பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago