முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபாலி: முதல்நாள் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம்!

செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2016      சினிமா
Image Unavailable

சென்னை, கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியாகிறது. தமிழ் தவிர மலாய் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கபாலி படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடங்கியது. கபாலி படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்று ஏராளமானோர் ஆர்வத்துடன் உள்ளதால், முன்பதிவு செய்வதில் ரசிகர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பல ரசிகர்களுக்கு முதல் நாள், முதல் காட்சி டிக்கெட்டுகள் கிடைக்காமல் போயிருக்கின்றன. எல்லோருக்கும் முதல் நாள் படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளதால் இதில் போட்டி கடுமையாகி, சராசரி ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் திரையரங்குகளும் அதிகமான அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன. விஐபிகளுக்கும் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் டிக்கெட்டுகளை விற்றுள்ளார்கள் என்று ரசிகர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட்டுகள் வாங்கியுள்ளதால் முதல் நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. ஆன்லைனில் 2வது நாளில் இருந்துதான் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. அதுகூட சிலருக்குக் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை வரை காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளன. முதல் காட்சி அல்லது முதல் நாள் படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தை ஈடுசெய்யமுடியவில்லை என்று ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்