முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்கில் ராஜபக்சே தம்பி பசில் மீண்டும் கைது

புதன்கிழமை, 20 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

கொழும்பு  - ஊழல் வழக்கில் ராஜபக்சே தம்பி பசில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. தேர்தலில் தோல்வி அடைந்த பின் இவர் மீதும் அவரது மனைவி, மகன்கள் மற்றும் தம்பிகள் மீதும் ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எனவே அவர்கள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது அவரது தம்பி பசில் ராஜபக்சே நிதி மந்திரி ஆக இருந்தார். அப்போது அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்ததாக ஏற்கனவே 2 தடவை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மந்திரியாக இருந்தபோது ஊழல் செய்ததாக நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, ரியல்எஸ்டேட் தொழிலில் ரூ.65 கோடி ஊழல் செய்ததாக ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே (30) கைது செய்யப்பட்டிருந்தார். அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இலங்கையை விட்டு வெளிநாடு எங்கும் செல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்