முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 வருடங்களாக தவறான இடத்தில் தேடபட்ட மலேசிய விமானம்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016
Image Unavailable

கோலாம்பூர் - மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச் 370 புறப்பட்டு சென்றது.  அந்தவிமானத்தில்  227 பயணிகள் 12 ஊழியர்கள் உள்பட 239 பேர் இருந்தனர். விமானம் புறபட்ட சிறிது நேரத்தில் மாயமானது.விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், விமான தேடுதல் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது. எனினும் இரண்டு வருடங்கள் ஆகியும் தெளிவான தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை, இந்நிலையில் தவறான இடத்தில் தேடிவருவதாக விமான தேடுதல் குழு அறிவித்துள்ளது.

அதாவது கடைசி கணங்களில் அது கடலுக்குள் சீறிப்பாய்ந்தது என்று கூற முடியவில்லை, எரிபொருள் தீர்ந்தாலும் திறமையான விமானியால் இன்னும் தூரம் (120 மைல்கள்) ஓட்டிச் செல்ல முடியும், அவ்வாறு சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தேடுதல் குழு இப்போது கூறுகிறது. தர்போது சுமார் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் தேடி உள்ளனர். இதற்காக ரூ900 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இருந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்டவில்லை.இந்நிலையில் தற்போது தவறான இடத்தில் தேடிவருவதாக விமான தேடுதல் குழு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்