முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோரக்பூரில் ரூ1000கோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

கோரக்பூர்  - கோரக்பூரில் ரூஆயிரம்கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைகட்டவும்  26 ஆண்டுகளாக  செயல்படாத உரத்தொழிற்சாலை மீண்டும் செயல்படுத்தவும்  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானிய மூளை காய்ச்சல் நோயால் கோரக்பூரில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.இந்த நிலையில் இங்கு எய்ம்ஸ் மருத்துவனை அமைக்கப்படுகிறது.  கோரக்பூர் விழாவில், பேசிய பிரதமர் மோடி கூறியதாவது,

 இங்கு உரத்தொழிற்சாலை மீண்டும் செயல்படுவதற்கு மோடி காரணம் என்று கூறக்கூடாது,இந்த புகழெல்லாம் மக்களையே சாரும். நான் உத்தரப்பிரதேச மாநில எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த மாநிலத்தில் பா.ஜ.க மகத்தான வெற்றி பெற்றுள்ளது.  கடந்த 26ஆண்டுகளாக இங்கு  உரத்தொழிற்சாலை திட்டம் செயல்படவில்லை. 2வது பசுமை புரட்சி கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளுக்கு உரமும் யூரியாவும் தேவை.

கோரக்பூரில் உரத்தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கியுள்ளது. இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே காரணம். அவர்கள் முடங்கிபோன உரத்தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்த அந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.கோரக்பூரில்  700 படுக்கை கொண்ட அதி நவீன மருத்துவமனையாக ரூஆயிரம் கோடியில் எஸ்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா தற்போது நடந்துள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதிய நிதியை அளிக்கிறது. ஆனால் அதனை மாநில அரசுகள் முறையாக செயல்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்