முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: விராட் கோலி இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி

வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

ஆன்டிகுவா   - .இ.தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இரட்டை சதத்தால் இந்தியா, முதல் இன்னிங்சின் 2-ம் நாள் உணவு இடைவேளை வரை 404 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மே.இ.தீவுக்கு சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆன்டிகுவாவில் தொடங்கியது. 5 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கியது. டாஸ் ஜெயித்த இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் களம் இறங்கினர்.

முரளி விஜய் 7 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் தவான் - புஜாரா ஜோடி பொறுமையாக விளையாடியது. உணவு இடைவேளையின்போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 72 ரன் எடுத்தது. இடைவேளைக்கு பிறகு புஜாரா 16 ரன்னில் ஆட்ட மிழந்தார். அவரது விக்கெட்டை பிஷு கைப்பற்றினார். அடுத்து கேப்டன் விராட் கோலி களம் வந்தார். அவரும் ஷிகர் தவானும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இருவரும் அரை சதத்தை கடந்தனர். ஸ்கோர் 179 ரன்னாக இருந்தபோது பிஷு பந்தில் ஷிகர் தவான் அவுட் ஆனார். அவர் 147 பந்தில் 84 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தது. அடுத்து கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 59.5 ஓவரில் 200 ரன்னை தொட்டது. அபாரமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். 134 பந்தில் 11 பவுண்டரியுடன் 110 ரன்னை கடந்தார். 42-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 12-வது சதமாகும்.

அவரது ஆட்டத்தை மே.இ.தீவு பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இந்திய அணி ரன்களை குவித்தது. ரகானே 22 ரன்னில் பிஷு பந்து வீச்சில் வெளியேறினார். அப்போது ஸ்கோர் 236 ரன்னாக இருந்தது. அடுத்து களம் வந்த அஸ்வின் கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் கோலியின் வேகம் கூடியது. இந்திய அணி 87.4 ஓவரில் 300 ரன்னை தொட்டது. நேற்று முன்தினம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டக்கு 302 ரன் குவித்தது. விராட் கோலி 143 ரன்னுடனும் (193 பந்து 16 பவுண்டரி). அஸ்வின் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

அதையடுத்து நேற்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியது. 2-வது நாள் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி, 208 பந்துகளில் 150 ரன்னை கடந்தார். அவருக்கு துணையாக ஆடிய அஸ்வின்  127 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். 5-வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 150 ரன் எடுத்தது. (கோலி - 94-ம் - அஸ்வில் - 53-ம், எக்ஸ்ட்ரா 3) சிறப்பாக ஆடிய விராட் - அஸ்வின் ஜோடியால் இந்திய அணி 117.3 ஓவரில் 400 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய கோலி 200 ரன்களை எடுத்தார். (இதில் 24 பவுண்டரிகள் அடங்கும்). 2-வது நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. மே.இ.தீவுகள் தரப்பில் பிஷு 3 விக்கெட்டும், கேபரியல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago