முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் எதிர்ப்பு பேரணியில் குண்டு வெடிப்பு : 61 பேர் பலி,160பேர் காயம்

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

காபூல்  - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  ஹஸ்ரா சமூகத்தினர் நடத்திய எதிர்ப்பு பேரணியில் குண்டு வெடித்தது.இந்த குண்டு வெடிப்பில் 61 பேர் பலியானார்கள். 160 பேர் காயம் அடைந்தார்கள் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.காபூலில் சிறுபான்மையினத்தவரான  ஷியா ஹசராஸ் பிரிவினர் நேற்று ஒரு எதிர்ப்பு பேரணி நடத்தினார்கள் இந்த பேரணியில் திடீரென்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 61பேர் பரிதாபமாக உடல் சிதறி இறந்தார்கள்.  இந்த குண்டு வெடிப்புக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. குண்டு வெடித்த இடத்தில் பலியானவர்களின் உடல் உறுப்புகள் சிதறி கிடந்தன. பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 மின்சாரம் பற்றாக்குறை உள்ள பாமியான் மாகாணம் வழியாக  பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின் இணைப்பு வயர்கள் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்து இந்த எதிர்ப்பு பேரணி நடந்தது.  அப்போது இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தார்கள்.  ஆப்கானிஸ்தானிலேயே மின்பற்றாக்குறை அதிகம் உள்ள மாகாணமாக பாமியான் உள்ளது.  அந்த பகுதியில் ஹஸ்ரா சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கிறார்கள். அமைதியான முறையில் பேரணி நடந்தநிலையில் இந்த கொடூர குண்டு வெடிப்பு நடந்துள்ளது என சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது அங்கு மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் ஜனாபதி அஷ்ரப் கனி விடுத்துள்ள அறிக்கையில்,

இந்த குண்டு வெடிப்பு பலி மிகவும் வேதனையை அளிக்கிறது. பலியானவர்களில் பாதுகாப்பு படையினரும் உள்ளனர் என தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் நடந்த இந்த பேரணியை பயன்படுத்தி தீவிரவாதிகள் குண்டை வெடிக்கச்செய்து இருக்கிறார்கள்.   பல ஆண்டுகளாக ஹஸ்ரா சமூகத்தை  சேர்ந்த 30லட்சம் பேர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டுகளின் இறுதியில் பஷ்துன் சன்னி தலிபான் தீவிரவாதிகளும், அல் கொய்தா தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தினர் .அதில் ஆயிரக்கணக்கான ஹசரா சமூகத்தினர் உயிரிழந்துள்ளனர்.-

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago