முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் தலித் இளைஞர்களை தாக்கிய 6 பேர் கைது

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத், குஜராத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் உனா என்ற இடத்தில் பசு மாட்டை கொன்றதாக தலித் இளைஞர்கள் 4 பேரை காரில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். இதை கண்டித்து குஜராத்தில் தலித் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் குஜராத் சென்று தாக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இந்த சம்பவம் பற்றி முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் ராஜ்கோட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் இளைஞர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுபற்றி நடவடிக்கை எடுக்காத 4 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இது போன்ற சம்பவம் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் ரஜிலா நகரில் 2 மாதத்துக்கு முன் நடந்தது. அப்போது தோலுக்காக பசுவை கொன்றதாக 5 தலித் சமூகத்தினர் தாக்கப்பட்டனர். பசு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக குஜராத் போலீசார் தற்போது 6 பேரை கைது செய்துள்ளனர். அதன் பிறகே ஏற்கனவே நடந்த தாக்குதல் சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் பசு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தாங்களாகவே அறிவித்துக் கொண்டு இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்