முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: துணை ஜனாதிபதி பதவிக்கு டிம் கெயின் வேட்பாளராக அறிவிப்பு

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் நவம்பர் 8-ம் தேதி நடக்கிறது. இந்த் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக  ஹிலாரி கிண்டன் போட்டியிடுகிறார். தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளார்.

அவர் வர்ஜீனியா செனட்டர் டிம் கெயினை தேர்ந்தெடுத்துள்ளார். டிம் கெயின் தனது வாழக்கையை மற்றவர்களுக்காக போராடுவதற்கு அர்ப்பணித்தவர் என்று ஹிலரி கிளின்டன் புகழ்ந்தார். செனட்டர் கெயின் பேசுகையில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தன்னை கவுரவிப்பதாக இருப்பதாக தெரிவித்தார். தான் தேர்தல் பிரச்சாரம் செய்ய துடிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்