முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் சுரங்க கட்டிடத்தில் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல்:

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் - சிரியாவில் சுரங்க கட்டிடத்தில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தை கிளர்ச்சியாளர்கள் குண்டு வைத்து தாக்கியதில் 38 ராணுவ வீரர்கள் பலியாயினர். சிரியாவில் 5 ஆண்டு களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் போரிட்டு வருகின்றன. பெரிய நகரங்களில் ஒன்றான காலப்போவின் மேற்கு பகுதி அரசு கட்டுப் பாட்டிலும், கிழக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசமும் உள்ளன.

இந்த நிலையில் அலப்போவில் அரசு வசம் உள்ள பகுதியில் சுரங்கம் அமைத்து உள்ளே கட்டிடங்கள் கட்டி அதில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக தங்கி உள்ளனர். அங்கு நுழைந்த கிளர்ச்சியாளர்கள் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தை குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இந்த தாக்குதலில் 38 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இதற்கிடையே  குண்டு வெடிப்பு  சம்பவத்துக்கு துவார் அல்-ஷாம் என்ற கிளர்ச்சியாளர்  குழு பொறுப்பு ஏற்றுள்ளது. மேலும் குண்டு வெடிக்கும் வீடியோ காட்சிகளை பல கோணங்களில் ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்