முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானுக்கு உதவுவதால் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவை குறிவைக்கின்றன : ஐ.நா. தூதர் தகவல்

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

ஐ.நா  - ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு உதவுவதால் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவை குறிவைக்கின்றன என்பு ஆப்கான் நாட்டிற்கான ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் தீவிரவாத இயக்கங்கள் குறித்து ஆப்கன் நாட்டிற்கான ஐ.நா. தூதர் தகவல் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:-  ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி பணிகளுக்கு உதவவும், அமைதியை கொண்டு வரவும் இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு தலீபானுடன் இணைந்து செயல்படும் பிராந்திய அளவிலான தீவிரவாத இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்த தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை சீர்குலைத்து வருகின்றன. குறிப்பாக, லஸ்கர்-இ-தொய்பா, தெக்ரிக்-ஐ-தலிபான் பாகிஸ்தான், ஜெய்ஷ்-இ-முகம்மது, அல்-கொய்தா, லஷ்கர்-இ-இஸ்லாம், சிபா-இ-சகாபா, உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் ஆகியவை அடங்கும்.  தீவிரவாதம் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago