முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனி துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை: சுஷ்மா சுவராஜ்

சனிக்கிழமை, 23 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - 15 பேர் பலியான ஜெர்மனியின் முனிச் நகர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இந்தியர்கள் யாரும் பாதிப்பு அடையவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது., ஜெர்மனியில் உள்ள இந்திய தூதர் குர்ஜித் சிங்குடன் நான் பேசினேன். முனிச் தாக்குதலில் பலியானவர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று அவர் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் ஜெர்மனியின் முனிச் நகரில் ஒலிம்பியா வணிக வளாகத்தில் உள்ள மெக்டோன்ல்டு உணவு விடுதி அருகே 18 வயது இளைஞர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். கண்மூடித்தனமான இந்த தாக்குதலில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் தனக்குத்தானே அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். ஈரான் வம்சாவளியை சேர்ந்த இவர் ஜெர்மனி குடியுரிமையும் வைத்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதுடன் முனிச் நகரில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.  இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து தெரிந்து கொள்ள அவசர உதவி எண்களையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்