முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 'ரெயில் ரேடியோ' சேவை விரைவில் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய ரயில்வே  துறை சார்பில், நாடு முழுவதும் 'ரெயில் ரேடியோ' சேவை விரைவில் துவக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 1000 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ரெயில்களில் பயணம் செய்துகொண்டிருக்கும் போது அனைத்து எப்.எம். ரேடியோ சேனல்களையும் கேட்கும் வகையில் 'ரெயில் ரேடியோ' என்ற புதிய சேவையை இந்திய ரெயில்வே விரைவில் துவங்குகிறது. இந்த ரேடியோ சேவை இயற்கை பேரிடர் போன்ற அவசரகாலங்களில் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு விரைந்து தகவல் தெரிவிக்கவும் உதவியாக இருக்கும்.

முதற்கட்டமாக, இந்த சேவையை நாடு முழுவதுமுள்ள 1000 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அறிமுகப்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது. ரெயில் பெட்டிகளில் உள்ள பி.ஏ. சிஸ்டம் வாயிலாக பிரபல பாடல்களையும் இசை நிகழ்ச்சிகளையும் கேட்கலாம். இதுமட்டுமின்றி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இடையில் ரெயில் தொடர்பான அப்டேட் செய்யப்பட்ட தகவல்களையும், அவசரகால அறிவிப்புகளையும் உடனுக்குடன் ரெயிலில் இருந்து கொண்டே தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரேடியோ சேவையில், ஜோக்குகள், ராசி பலன்கள், இந்திய ரெயில்வேயின் வரலாறு போன்ற சுவாரஸ்யமான பலவற்றையும் இடம்பெற செய்ய ரெயில்வே ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஏற்கனவே 2016-17 ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.  தற்போது, ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி விரைவு ரெயில்களில் மட்டுமே பி.ஏ. சிஸ்ட்ம் வசதி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்