முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இருந்து 29 வீரர்களுடன் சென்ற விமானம் மாயம் - இஸ்ரோ உதவியுடன் தேடுதல் பணி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

விசாகப்பட்டினம் :  காற்று சுழற்சியில் சிக்கி விபத்துக்குள்ளாகி மாயமான இந்திய விமானப்படை விமானத்தை 3வது நாளாக தேடும் பணி நேற்று நடைபெற்றது. விமானத்தை கண்டுபிடிக்க இஸ்ரோவின் செயற்கைக் கோள் உதவி கோரப்பட்டுள்ளது. இந்த தேடும் பணியில் இஸ்ரோவின் செயற்கைகோள் உதவும் என அந்த அமைப்பின் தலைவர் கிரண் குமார் உறுதியளித்தார்.

கடந்த 22ம் தேதி காலை 8.30மணிக்கு சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில்  இருந்து அந்தமானுக்கு இந்திய விமானப்படையின் விமானம் சென்றது . அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது? இந்த நிலையில்  அந்த விமானம் காற்று சுழற்சியின் காரணமாக விபத்தில் சிக்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் இருந்த 29 வீரர்களின் நிலை என்ன என்பது புதிராக உள்ளது.

இந்த நிலையில் நேற்று 3வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. மாயமான விமானத்தினை கண்டுபிடிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) செயற்கைகோள் பட பதிவு உதவி கோரப்பட்டுள்ளது. இந்த தேடுதல் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்தார். மாயமான விமானத்தை தேடும் பணியில்  கடற்படையின் 18 கப்பல்கள், 8விமானங்கள்  இரவு பகலாக ஈடுபட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக தேடும் பணி பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் விமானத்தை கண்டு பிடிக்க இஸ்ரோவின் செயற்கைக்கோள் பட உதவியை விமானப்படை எதிர் நோக்கியுள்ளது. மாயமான விமானத்தை கண்டுபிடிப்பதில் இஸ்ரோவின் செயற்கை கோள் உதவியை கேட்டு இருப்பதாக விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளபதி எச்.சி.எஸ். பிஷ்த் தெரிவித்தார்.

கடலின் 3ஆயிரத்து 500 மீட்டர் ஆழத்தில் மாயமான விமானத்தை தேடும் பணி 24 மணி நேரமும் நடக்கிறது. இந்த தேடுதல் நடவடிக்கை விவரங்கள் விமானத்தில் சென்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்