முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்ய சபாவில் சரக்கு சேவை வரி மசோதா விவாதம்: மாநில நிதியமைச்சர்களுடன் அருண் ஜெட்லி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ராஜ்ய சபாவில் நிறைவேற்ற மத்திய அரசு இந்த வாரம் விவாதத்திற்கு வைக்கிறது. இந்த மசோதா  நிறைவேறுவது குறித்து முக்கிய எதிர் கட்சியான காங்கிரஸ் மற்றும் மாநில நிதியமைச்சர்களை சந்திக்கும் பணியை மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி மேற் கொண்டுள்ளார்.

அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக இருக்கக்கூடிய சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) மசோதாவை மத்திய அரசு லோக் சபாவில் நிறைவேற்றியது. இந்த மசோதா ராஜ்ய சபாவில் எதிர் கட்சிகளின் எதிர்ப்பால் இன்னும் நிறைவேறாமல் உள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதா நிறைவேறுவதால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் ஜி.எஸ்.டி மசோதவை இந்த வாரத்தில் ராஜ்ய சபாவில் விவாதத்திற்கு மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஆளும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்கு ராஜ்ய சபாவில் போதிய பலம் இல்லை . எனவே இதனை நிறைவேற்ற காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளின் உதவியை மத்திய அரசு எதிர் நோக்கியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினரை நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்துள்ளார் . மேலும் அவர் மாநில நிதியமைச்சர்களை சந்திக்கிறார். ஜி.எஸ்.டி திருத்த மசோதா விவரங்கள் குறித்தும் அவர் விளக்குகிறார். ஒரு சதவீத கூடுதல் வரியை ரத்து செய்கிறோம். எனவே இந்த மசோதாவை நிறைவேற்ற உதவுங்கள் என ஜெட்லி கேட்டுக்கொண்டுள்ளார். மாநிலங்களின் கருத்துக்களுக்காக இந்த மசோதா ராஜ்ய சபா விவாதத்திற்கு இந்த வாரம் கொண்டு வரப்படுகிறது.

இந்த மசோதா ராஜ்ய சபாவில் விவாதத்திற்கு வரும் விவரத்தை பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.  தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஒப்புதலுக்கு பின்னர், இந்த கூடுதல் வரியை நீக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் மறைமுக வரி சீரமைப்பு  மசோதாவை நிறைவேற்ற பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக  ஜெட்லி  பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திரா ,தெலுங்கானா மாநில தலைவர்களை ஜெட்லி சந்தித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்