முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆடி  பெருக்கு விழாவையொட்டி மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   இது குறித்து  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

விவசாயம் செழிக்க வேண்டி காவிரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் விழாவான, ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வோரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2.8.2016 அன்று வருகின்ற ஆடிப் பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று காவேரி பகுதி மக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

தற்போது, மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவேரிப் பகுதிமக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக விடுவிக்கப்பட்டு வரும் 2000 கனஅடிநீருடன் கூடுதலாக 25-ம் தேதி (இன்று)  முதல் 28-ம் தேதி வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதமும், அதன்பிறகு 29.7.2016 முதல் 31.7.2016 வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago