முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாஞ்சில் சம்பத்தின் தந்தை மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க செய்தி தொடர்புக்குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வரும் அ.தி.மு.க பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:-

அ.தி.மு.க செய்தி தொடர்பு குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத்தின் தந்தை பாஸ்கர் பணிக்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து வி்ட்டார் என்ற செய்திக்கேட்டு வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் அன்புசகோதரர் நாஞ்சில் சம்பத்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்